February 8, 2010

விஜய் நீயா... நானா...தமிழ்த் தொலைக்காட்சிகளில் வரும் சிறிதளவாவது உருப்படியான நிகழ்ச்சிகளில் விஜயின் நீயா? நானா?வும் ஒன்று. 24.01.2010 அன்றான விவாதம் சிறு சிறு வேலைகள் (வீட்டுவேலை, மெக்கானிக், சேல்ஸ் ரெப், ஆட்டோ ஓட்டுனர், இப்படி) செய்பவர்களுக்கும், பயனாளர்களுக்கும் இடையிலான உறவைப்பற்றியதாக இருந்தது. பயனாளர்களின் குற்றச்சாட்டுகளும் அதற்கு பணியாளர்களின் பதிலும் முன்வைக்கப்பட்டன்.அவைகளில் சில:-
*^*^*^*^*
??? வீட்டுவேலை செய்பவர்களால் தனிப்பட்ட/வீட்டுச்செய்திகள் மற்றவர்களுக்குப் பரப்பப்படுகிறது.

!!! வீட்டுக்காரர்கள்தான் பக்கத்துவீட்டுச் செய்திகளை ஆர்வத்தோடு விசாரிக்கிறார்கள்.
*^*^*^*^*
??? வண்டியை பழுதுபார்க்க/சர்வீஸ்செய்ய விடும்போது கூடுதலாக பில்போடப்படுகிறது; ஒரு குறிப்பிட்ட கடையிலேயே தொடர்ந்து ஸ்பேர் வாங்குவதன் மூலம் கமிசன் பெறுகிறார்கள்.

!!! அப்படியெல்லாம் இல்லை. ஒரே கடையில் தொடர்ந்து உதிரிபாகங்கள் வாங்கும்போது, வாங்கியபின் அதில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் மாற்றிக்கொள்வது எளிதாக இருக்கிறது
*^*^*^*^*
??? ஆட்டோவில் மீட்டர் போடுவதே கிடையாது. பயணிகளுக்கு மரியாதை கொடுப்பதில்லை.

!!! மீட்டர் போடுவது கட்டுபடியாகவில்லை. அரசாங்கம் நியாயமான கட்டணத்தை நிர்ணயிப்பதில்லை. பயணிகள்தான் ஆட்டோக்காரர்களை ஏய் ஆட்டோ என மரியாதைக்குறைவாக அழைக்கிறார்கள்.
*^*^*^*^*
பணம்கொடுக்கிறோம் என்பதால் பணிசெய்பவர்கள் நம் அடிமைகள் அல்ல நமக்குத் தோன்றியபடி அவர்களை நடத்துவதற்கும் பேசுவதற்கும். நாம் பெரும்பாலனவர்கள் பிறிதோரு இடத்தில் வேலை செய்பவர்கள்தான் என்பதை மறந்து எளிய மனிதர்களின் மேல் அதிகாரம் செலுத்தும் மனப்பான்மையைத் தவிர்க்கவேண்டும் போன்ற நல்ல விசங்களை நம்மில் பதித்தது.

உறுத்திய ஒரு விசயத்தைப் பதியவே இவ்விடுகை. பணிசெய்பவர்கள் தரப்பிலிருந்து பேசிய ஒரு சேல்ஸ்ரெப், 'வணிகம் நிமித்தம் வீடுகளுக்குச்சென்றால் கதவையே திறப்பதில்லை. மிகக்கேவலமாக நடத்துகிறார்கள். நாய்களை அவிழ்த்து விடுகிறார்கள்' என வருத்தப்பட்டார்.

அதற்கு ஒருபெண், 'வீட்டுவேலைகளை முடித்துவிட்டு சற்று அயர்வாக ஓய்வெடுக்கும் நேரங்களில் கதவைத்தட்டி தொந்தரவு செய்கிறார்கள், அதனால் கதவைத் திறப்பதில்லை' எனப் பதிலளித்தார்.

நிகழ்ச்சி நடத்துனரோ வீடுதேடி வரும் சேல்ஸ்ரெப்களை மரியாதையாக நடத்துங்கள். கனிவாகப் பேசுங்கள். அவர்களும் மனிதர்கள்தான் என ஆலோசனை சொன்னார்.

என் கேள்வி இதுதான்.
தன் வருமானம் நிமித்தம், முன்பின் தெரியாத ஒருவரின் வீட்டுக்கதவை முன்அனுமதியின்றி தட்டுவது சரியான செயலா? ஒருவரின் தனிப்பட்ட நேரத்தை தன் சுயநோக்குக்காக வலியச்சென்று அபகரிப்பது முறையா? இம்மாதிரியான வணிகஉத்தி ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதானா?.

.

5 comments:

குட்டிபிசாசு said...

//தன் வருமானம் நிமித்தம், முன்பின் தெரியாத ஒருவரின் வீட்டுக்கதவை முன்அனுமதியின்றி தட்டுவது சரியான செயலா? ஒருவரின் தனிப்பட்ட நேரத்தை தன் சுயநோக்குக்காக வலியச்சென்று அபகரிப்பது முறையா? இம்மாதிரியான வணிகஉத்தி ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதானா?.// நிகழ்ச்சியைப் பார்க்கும்போது நானும் இதை யோசித்தேன். சேல்ஸ் ரெப் போல வந்து திருட்டு,கொள்ளை நடந்த சம்பவங்களும் செய்தியாக வருகிறது தானே?

Sangkavi said...

உங்கள் கேள்வி சரியானது...

PPattian : புபட்டியன் said...

நல்ல கேள்வி.. எல்லாவற்றையும் போல இதிலும் சாதகமும் பாதகமும் உண்டு.. ஆனாலும் சேல்ஸ் ரெப்கள் பல நேரங்களில் தொல்லைதான்.

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//தன் வருமானம் நிமித்தம், முன்பின் தெரியாத ஒருவரின் வீட்டுக்கதவை முன்அனுமதியின்றி தட்டுவது சரியான செயலா? ஒருவரின் தனிப்பட்ட நேரத்தை தன் சுயநோக்குக்காக வலியச்சென்று அபகரிப்பது முறையா? இம்மாதிரியான வணிகஉத்தி ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதானா?.//


மிகவும் மரியாதையுடனும் கனிவுடனும் கதவைத் திறக்காமல் இருக்கலாம் அல்லவா..,

பெரியன் said...

@குட்டிபிசாசு, நீங்க சொல்றதும் சரிதான். வருகைக்கு நன்றி.

@Sangkavi, வருகைக்கு நன்றி.

@SUREஷ், யாரும் கதைவைத்திறப்பதில்லை என்று தான் சேல்ஸ்ரெப் புகார் கூறினார் :-) வருகைக்கு நன்றி.

Post a Comment